விஜய் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் காமெடி ஆக்சன் என அனைத்தும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் ஒரு தரப்பினரோ இந்த படம் முழுக்க முழுக்க சீரியல் போல ரொம்ப நேரம் இழுத்து இருக்கின்றனர் என கமெண்ட்டுகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் தொடர்ந்து அது பெரிய அளவில் பேசப்பட்டது இதற்கு படக் குழுவினர் பலரும் தக்க பதிலடிகள் கொடுத்து வந்தனர் இது இப்படி இருந்தாலும் மறுபக்கம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது தமிழகத்தில் மட்டும் இதுவரை 122 கோடி வசூல் அள்ளி உள்ளது .
உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன் அண்மையில் கூட வாரிசு படக்குழு ஹைதராபாத்தில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது அதில் விஜய்யும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வாரிசு சீரியல் என விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. வாரிசு படத்தை சீரியல் போல இருக்கிறது என விமர்சித்தார்கள் ஆனால் தற்பொழுது அதற்கு வந்திருக்கும் வசூலை பார்த்தீர்களா என கேட்டிருக்கிறார்.
ஒரு குழந்தை விஜய் அண்ணா வாரிசு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிப்பதாக ஒரு பெண் என்னிடம் லைவ்வில் பேசும்பொழுது கூறினார் அப்படி கேட்டால் அதற்கு மொத்த குடும்பமும் சேர்ந்து தான் போவார்கள் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என எஸ் ஏ சந்திரசேகர் குறிப்பிட்டு இருக்கிறார்.