அண்ணன் தம்பி கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை..! விஜய்காக பிரபல இயக்குனரிடம் கெஞ்சிய எஸ் ஏ சந்திரசேகர்..!

vijay-dad

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு அதில் மிகப் பிரமாண்டமாக பயணித்து வருபவர் தான் நடிகர் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியான போற்றப்பட்டு வருகிறார். தற்போது இவர் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தாலும் இதற்கு முன் அவர் கஷ்டங்களை அனுபவித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தளபதி விஜய் வாழ்க்கையில் அவருடைய தந்தையின் பங்கு அதிக அளவு உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகர் விஜய்யை எப்படியாவது ஒரு மிகப்பெரிய ஹீரோவாக மாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் அவரே பல திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு மற்ற இயக்குனர்களை வைத்தும் பல திரைப்படங்களை தன் மகனுக்காக வாய்ப்பு வாங்கி கொடுத்தது மட்டுமில்லாமல் விஜய்க்காக பல்வேறு விஷயங்களை எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் செய்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்யை பார்த்திபன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என தளபதி விஜயின் தந்தையார் அவர்கள்  பார்த்திபன் இடம் கேட்டுள்ளார். இவ்வாறு நடந்த சம்பவத்தை பற்றி   பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி பேசி உள்ளார்.

parthipan
parthipan

அப்போது அவர் கூறியது என்னவென்றால் ரொம்ப வருடங்களுக்கு முன்பாக விஜய்யை சந்திரசேகர் சார் என் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு அழைத்து வந்தார் அப்போதுதான் விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்தார் அப்பொழுது எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் என்னிடம் தன்னுடைய மகனை உங்கள் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் நடிக்க வையுங்கள் அதாவது அண்ணன் தம்பி போன்ற கதாபாத்திரமாவது கொடுங்கள் என பார்த்திபனிடம் கேட்டுள்ளார். இவர் வெளிவந்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.