நடிகர் விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு அட்லி செய்த கேவலமான சம்பவத்தை கூறி அவமானப்படுத்தி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது பிகில் படத்தில் நடித்த ஐந்தாயிரம் துணை நடிகர்களுக்காக கொடுக்கப்பட்ட சம்பளத்திலிருந்து அட்லி பத்து சதவீதம் கமிஷன் அடித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை தந்த நிலையில் இதன் மூலம் முன்னணிய இயக்குனராக சினிமாவில் உயர்ந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் பாலிவுட் முன்னணி ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சினிமாவில் பிரபலம் அடைந்திருக்கும் பிரபலங்கள் மீது விமர்சனங்கள் எழுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தான் அட்லி இயக்கிய அனைத்து படங்களும் காப்பி என ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக தமிழில் வெளியான படம் தான் விஜய்யின் பிகில். இந்நிலையில் மிர்ச்சி சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா படம் வருகின்ற மார்ச் 24ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக உள்ளது இந்த படத்தினை கண்ணன் இயக்கியுள்ள நிலையில் நேற்று பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கு பெற்ற தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய பொழுது இயக்குனர் அட்லியையும் அவர் இயக்கிய பிகில் படத்தையும் பற்றி கூறினார்.
அவர் கூறுகையில், ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தை தான் பிகில் என்ற பெயரில் அட்லீ எடுத்துள்ளார். அதில் ஹாக்கி இதுல கால்பந்து தயாரிப்பாளர் எட்டு எட்டி உதைத்து விட்டார். இயக்குனர் ஏஜிஎஸ் பெரிய கம்பெனி என்பதால் படத்தினை சமாளித்தார்கள் ஐந்தாயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து விட்டு அதில் பத்து சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளார் இயக்குனர்.
தயாரிப்பாளரிடம் 30 கோடி 40 கோடினு சம்பளம் வாங்கிக்கிட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் பத்து சதவீதம் கமிஷன் வேற வாங்குறது நியாயமா.. இதெல்லாம் நீக்குமா.. இந்த பணம் அதனால தான் நீ எடுத்த படம் இரண்டுமே அவுட் இவர்கள் எல்லாம் துரோகிகள் என அட்லீயை வெளுத்து வாங்கியுள்ளார் விஜய்யின் அப்பா.