தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சமீப காலமாக ஹாலிவுட்,பாலிவுட் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து சில திரைப்படங்கள் தமிழில் தோல்வி அடைந்து வந்ததால் வெற்றி திரைப்படத்தை தர வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அவருடைய நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது மேலும் தற்பொழுது இப்படத்தில் தனுஷின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ் கலைப்புலி தானு.
அதில் ஒரு போஸ்டரில் மீசை இல்லாமலும் இளம் பருவத்தில் இருப்பது போலவும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார் மற்றொரு போஸ்டரில் நடுதரகட்டத்தில் தாடி மீசை உடன் கண்ணாடி அணிந்த நிலையில் தலையில் கேப் அணிந்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இன்னும் சில வாரங்களில் இந்த திரைப்படத்தை தியேட்டரில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்னும் சில நாட்களில் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ரம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.