சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்து பின் நடிக்கவும் தொடங்கியவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் அஜீத்தை வைத்து வாலி அதன்பின் அடுத்ததாக விஜய்யை வைத்து குஷி என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நல்ல வெற்றியை கொடுத்தாலும் போகப் போக பெரும் தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்.
இதனால் அவர் இயக்குனர் மற்றும் நடிகர் எதிலேயும் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியாமல் போனது இருப்பினும் அவ்வபோது படங்களை இயக்கி வந்தாலும் அவரால் தனது பழைய நிலைமைக்கு திரும்பவில்லை. இதை உணர்ந்துகொண்ட எஸ் ஜே சூர்யாவும் தனது நடிப்பையும் மெருகேற்றி ஆரம்பித்தார். அந்தவகையில் இவர் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அசத்தியிருந்தார்.
அதிலிருந்து இவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாகவே தான் அமைந்துள்ளது இவர் அதன்பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தி இருந்தார் இந்த திரைப்படம் பேய் படமாக இருந்தாலும் இதில் அவரது நடிப்பு வேற லெவல் இல் இருந்ததால் பலரும் வாழ்த்தினர். மேலும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தற்போது பட வாய்ப்புகள் கொடுகின்றனர்.
தற்போது இவர் மாநாடு, டான் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்தது அந்தவகையில் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரோ லூயிஸ் இயக்கும் ஐஸ்வர்யா என்ற பெயரில் உருவாக உள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நாயகனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த வெப்சீரிஸ் சினிமாவுக்கு நிகராக பிரம்மாண்ட தயாரிப்பில் அதாவது 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோ, வில்லன் என இரண்டிலும் அசத்தி கூறுவதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளதால் அவரது படத்திற்கான பட்ஜெட்டும், அவரது சம்பளமும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.