எஸ்.ஜே . சூர்யாவை தொடர்ந்து மாஸ் வில்லனுடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது வரை சிறப்பாக ஜொலித்து வரும் நடிகர் சிம்பு. இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்காக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி நடை கண்டு வந்தார்.

இப்படி டாப் நடிகராக வலம் வந்த சிம்பு ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி படங்களில் பெரிதும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். எனினும் அப்போது நடித்த ஒரு சில படங்களும் மக்களிடையே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதனால் பின்பு கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக மாற்றிக்கொண்டு கம் பேக் கொடுக்கும் வகையில் ஈஸ்வரன் மாநாடு போன்ற திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

மேலும் சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலை வாரி குவித்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்துல தல, போன்ற திரைப் படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.

தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக கொரோனா குமாரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகின.

இதனிடைய சிம்புவின் மாநாடு திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானதற்கு காரணம் அந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து அசத்திய வில்லன் கதாபாத்திரமும் தான்.அதனால் சிம்பு அடுத்தடுத்து அவர் நடிக்க உள்ள திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என இயக்குனரிடம் கூறியிருந்தாராம் .

அதனால் தற்போது மலையாள நடிகரான பகத் பாசில் தமிழில் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் இந்த கொரோனா குமாரு திரைப்படத்தின் இயக்குனர் வில்லன் கதாபாத்திரத்திற்கு பகத் பாசிலுடன் கதை கூறியுள்ளாராம். அவருக்கும் இந்த கதை பிடித்து உள்ளதால் சிம்புவின் கொரோனா குமாரு திரை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.

இதனிடையில் தமிழில் வில்லன் கதாபாத்திரத்தில் பின்னிப் பெடல் எடுத்து வரும் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி போன்றவர்கள் வரிசையில் பகத் பாசிலும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.