S. A. Chandrasekhar: எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய் குறித்து பேசி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அப்படி கடைசியாக விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான லியோ படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் 2023 அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக லியோ அமைந்தது அப்படி லியோ படத்தில் விஜய் நடித்தது குறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் விமல் நடித்திருக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் ஜெயம் ரவி, இயக்குனர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்.வி உதயகுமார், ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர் தற்போது இயக்குனர்களின் பலர் திரைக்கதையை மதிப்பதில்லை என்று கூறினார்.
நடிகரால் ஒரு படம் ஓடிவிட்டால் தங்களை பெரிய இயக்குனராக கருதுவதாகவும் நான் பார்த்த படம் ஒன்றில் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் தந்தை பிள்ளையை பலி கொடுப்பதாக காட்சி வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறினார். படம் வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே படத்தை தான் பார்த்துவிட்டு இயக்குனரை எச்சரித்ததாகவும் ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் வில்லன் நடிகரை வைத்து எடுக்கும் காட்சிகளை எல்லாம் கோடிக்கணக்கானோர் பின்பற்ற நாயகனை வைத்து காட்சிப்படுத்துவது சமூக வலைத்தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இயக்குனர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என்றும் எம்ஜிஆர் ஏன் தனது படங்களில் மது அருந்தும் காட்சி வைப்பதில்லை என்று விளக்கி 3 நேரம் படத்தில் 3 நிமிடமாவது நல்ல கருத்துக்களை கூற வேண்டும் என்றார்.
காதலர் தினத்திற்கு முன்பே பிப்ரவரி- 2 ல் ரிலிஸ் ஆகும் 4 திரைப்படங்கள்.!
எவன் ஒருவன் தன் தாயை உயர்த்துகிறானோ அவனை இறைவன் உயர்த்துவான் என்று பல தகவல்களை பகிர்ந்தது மக்களுக்காக அரசியல் கட்சி தொடங்கும் விஜய் தனது பெற்றோரை கண்டு கொள்ளவில்லை என்பதால்தான் இவ்வாறு இவர் பல விஷயங்களை பகிர்ந்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.