ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ருத்ரன் இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து சரத்குமார் பூர்ணிமா பாக்யராஜ் நாசர் காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நாலு வருடங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு திரைப்படம் வெளியாகி உள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ருத்ரன் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை இங்கே காணலாம்.
படத்தின் கதை
தனது தந்தை நாசர், தாய் பூர்ணிமா பாக்கியராஜ், ருத்ரன் ராகவா லாரன்ஸ் என அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ருத்ரன் தன்னுடைய தாய் மீது அதிக பாசத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். திருமணம் வரை செல்லும் பொழுது ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது ருத்ரன் தந்தை தன்னுடைய நண்பரை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர் ஆனால் அவர் நாசரை ஏமாற்றிவிட்டு ஆறு கோடி எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
கடனை கொடுக்க முடியாமலும் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமலும் மரணம் அடைந்து விடுகிறார் நாசர். நாசரின் மரணத்திற்குப் பிறகு வாங்கிய 6 கோடி கடனையும் வட்டியுடன் ஏழு கொடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என கடன் கொடுத்தவர் வீட்டில் வந்து நிற்கிறார் இந்த நிலையில் தந்தை நடத்தி வந்த ட்ராவல்ஸ் நிறுவனத்தை விற்று மூன்று கோடி ரூபாய் முதலில் கொடுத்து விடுகிறார் ருத்ரன்.
எப்படியாவது மீதி உள்ள 4 கோடியை அடக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார் ஏனென்றால் அங்குதான் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக இதற்கிடையில் பிரியா பவானிசங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு மீண்டும் வருவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாயும் மரணம் அடைந்து விடுகிறார்.
பிறகு ப்ரியா பவானி சங்கர் காணாமல் போகிறார். ருத்ராயன் தாய் எப்படி இறந்தார் பிரியா பவானி சங்கர் எப்படி காணாமல் போனார் இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை ருத்ரன் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
ஹீரோவாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் ஆக்சன், காதல், பாசம் சென்டிமென்ட் என அனைத்திலும் ஒன்மேனாக கலக்கி வருகிறார். அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கிறார் அதேபோல் ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அதேபோல் மனைவியாக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்துக் காட்டியுள்ளார் அது மட்டுமில்லாமல் முழு வில்லன் கதாபாத்திரமாக சரத்குமார் மிரட்டியுள்ளார். பலரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்கள் முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள தயாரிப்பாளர் கதிரேசன் எடுத்துக்கொண்ட கதைக்களம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
ஆனாலும் இத்தனை கதையில் சற்று சறுக்கல்கள் இருந்தாலும் நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகள் என கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது அது மட்டும் இல்லாமல் பழிவாங்கும் கதை பலமுறை பல திரைப்படத்தில் பார்த்துள்ளோம் அதேபோல் தான் இந்த திரைப்படத்திலும் படத்தின் இறுதியில் தாய் தந்தையை தனியாக விட்டு விடாதீர்கள் என்ற கருத்தை கதிரேசன் சொல்ல வந்துள்ளார் இது இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் செல்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி கைத்தட்டலை பெற்றுவிடுகிறது…