பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகின்றன சின்னத்திரையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபலமடைந்ததை அடுத்து அதில் கலந்து கொண்ட சில முக்கிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் பிக்பாஸில் சற்று சுவாரசியம் குறைவாக இருந்தாலும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடினர்.
அந்த வகையில் சென்ற வாரம் கூட 15 லட்சம் பணத்துக்காக கடுமையான டாஸ்க் நடைபெற்றது இதில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி சுருதி 15 லட்சம் மதிப்புள்ள பணப் பெட்டியை எடுத்து பிக்பாஸ் அல்டிமேட் இல் இருந்து வெளியேறினார். அவரை அடுத்து தற்போது பைனல்ஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஜூலி, தாமரை செல்வி, நிரூப் மற்றும் அபிராமி போன்ற 6 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருவதால் வருகின்ற நாட்களில் போட்டிகலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு வெளியேறிய சில போட்டியாளர்களும் தற்போது கெஸ்ட் ஆக இந்த நிகழ்ச்சிகுள் வந்துள்ளனர்.
அப்படி அனிதா சம்பத் சாரிக் போன்றவர்கள் பைனன்ஸ் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் வெற்றியாளர் யாராக இருப்பார் என பலரும் யோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் பாலாஜி முருகதாஸ் தான் பிக்பாஸ் அல்டிமேட் பட்டத்தை வெள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவருகிறது. அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் நிரூப் அல்லது ரம்யா பாண்டியன் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.