தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடன ஆசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் மட்டும் பத்து கோடி வரை வசூல் செய்து உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ருத்ரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடைசி நேரத்தில் ருத்ரன் படத்தின் தடையை உடைத்து படம் ரிலீஸ் ஆனது இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தாலும் பிரபலம் ஒருவர் ருத்ரன் படத்தை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
அதாவது ருத்ரன் படம் என்ட்ரன்ஸில் வில்லன் ஒருவர் நாலு பக்கம் டயலாக் பேசுகிறார் அப்போது அந்த இடத்திற்கு பூமி அதாவது சரத்குமார் வருகிறார். அங்கே நின்று பேசிய அந்த வில்லனை நான்கே குத்தில் சாகடித்து விடுகிறார். இப்படியா படம் எடுக்கிறது என்று கலாய்த்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ரீமேக் செய்கிறேன் என்கிற பெயரில் ஒரு பழைய பாடலுக்கு ஏத்த மாதிரி நடனம் ஆடுவார்கள் என்று பார்த்தால் சம்பந்தமே இல்லாமல் ஒரு நடனத்தையும் ஸ்டெப்பையும் போட்டு இருக்கிறார் நடிகர் லாரன்ஸ். அதைவிட ஜெரத்தால பாடலை புதுமுக இளைஞர்களுடன் ஆடி இருக்கிறார் ஆனால் இந்த பாட்டு இருக்கு நடனம் இருக்கிறதோ இல்லையோ கூட்டம் மட்டும் பயங்கரமாக இருக்கிறது என்று பங்குமாக கலாய்த்து இருக்கிறார்.
மேலும் கடைசியாக ராகவாவுக்கு பேய் பிடித்து அடிப்பார் என்று பார்த்தால் பேய் போலவே அடித்திருக்கிறார் இதற்கு பாலையாவிடம் பர்மிஷன் வாங்கினாரா இல்லையா என்று ருத்ரன் படத்தை பங்கமாக கலாய்த்து இருக்கிறார் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.