தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சினிமா கேரியரில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்திருக்கும் நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் கடைசியாக காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகி படும் தோல்வியினை சந்தித்தது.
எனவே இந்த படத்தின் தோல்வியினைத் தொடர்ந்து இவர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதன்முறையாக இயக்கியிருக்கும் ருத்ரன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பட குழுவினர்களும் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக் கொண்டு பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் ருத்ரன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு ஏராளமான திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியாராஜ், நாசர், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
நான்கு வருடங்கள் கழித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ருத்ரன் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் முதல் நாள் ரூபாய் 10 கோடி வரை வசூல் செய்திருந்தது. மேலும் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் ஒரு சில காட்சிகள் மிகவும் கடுப்பினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
இப்படி கலவை விமர்சனத்திற்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிவந்த நிலையில் இரண்டு நாள் முடிவில் இரண்டு கோடிகள் மட்டுமே அதிகரித்து ரூபாய் 12 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விடுமுறை நாட்களில் பலரும் திரையரங்குகள் இருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இப்படி விடுமுறை நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கவில்லை எனவே இந்த படம் இதற்கு மேல் வசூல் அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.