ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தை தயாரித்துள்ளார் இவர் இதற்கு முன்பு பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர். இவர் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் ருத்ரன் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மிரட்டல் வில்லனாக சரத்குமார் பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளார்கள் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் ருத்ரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாகி வருகிறது இதன் பஸ்ட் லுக் போஸ்டர் ராகவா லாரன்ஸ் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமாக நிற்கும்படி அமைந்திருக்கும் அவரால் தாக்கப்பட்டவர்கள் கீழே கிடப்பது போல் இருக்கும்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராகவா லாரன்ஸ் ஜார்னரில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது ஆக்சன் பேக் ட்ரைலர் என சொல்லப்பட்ட நிலையில் தொடக்கம் முதல் இறுதி வரை படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பது போல் காட்டியுள்ளார்கள் கிட்டத்தட்ட நடிகர் பாலையாவையே தூக்கி சாப்பிடும் வகையில் ராகவா லாரன்ஸ் வில்லன்களை பறக்க விடுகிறார்.
இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் படத்தை வருகின்ற 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.