சிறந்த இயக்குனர்கள் பலரும் சமீபகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் எஸ்எஸ் ராஜமௌலி. இவர் பல சிறப்பான படங்களை இயக்கினாலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பாகுபலி படம் தான் இவரது மார்க்கெட்டை உயர்த்தியது.
பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படியும் கொண்டாடப் படும் படியும் இருந்தது அந்த அளவுக்கு படத்தை எடுத்திருந்தார்.இந்த பிரமாண்ட படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் பலரும் அவரை செல்லமாக பிரம்மாண்ட படைப்பாளி ராஜமவுலி என தான் கூப்பிட்டு வருகின்றனர். முதல் பாகம் அமோக வெற்றி பெற்றதை..
தொடர்ந்து அதன் அடுத்த படமான பாகுபலி இரண்டாவது பாகம் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தியது. இதனால் அவரது சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இப்பொழுது கூட ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து RRR என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக வருகின்ற மார்ச் 25ஆம் தேதி அதாவது நாளை உலக அளவில் படம் ரிலீசாக இருக்கிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளும் என படக்குழுவும் ராஜமவுலி ரசிகர்களும் எதிர்நோக்குகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் RRR திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 550 க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 550க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்பதால் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் கூறப்படுகிறது.