2.0 படத்தின் வசூலை ஓவர்டேக் செய்த RRR.. வசூல் மழையில் படக்குழு.!

RRR-and-2.0
RRR-and-2.0

எஸ் எஸ் ராஜமௌலி அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில்  பல தரமான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் முதலில் பிரபாஸை வைத்து பாகுபலி என்ற படத்தை எடுத்தார் அதனை தொடர்ந்து பாகுபலி இரண்டாவது படமும் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்.  இந்த இரண்டு திரைப்படங்களும் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது.

அதன்பின் ராஜமௌலியின் சினிமா பயணம் உச்சத்திற்கு சென்றது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு  எஸ் எஸ் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்தார் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது.

வெளியான நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது முதல் நாளில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையில் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும்  வசூல் குறையாமல் நன்றாகவே வேட்டை நடத்தியதால் இந்த திரைப்படம் இதுவரை  750 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் குறைந்த நாட்களிலேயே நிச்சயம் 1000 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தின் வசூலை முந்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் 2.0 திரைப்படம் மொத்தமாக 650 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது ஆனால் RRR திரைப்படம் 750 கோடிக்கு மேல் அள்ளி தற்போது அதை ஓவர்டேக் செய்து வசதி இருக்கிறது இன்னும் பல்வேறு படத்தின் சாதனைகளை முறியடிக்க ரெடியாக இருக்கிறது RRR.

2.0
2.0