முன்பு நடந்த உண்மையான நிகழ்வுகளை படமாக எடுத்து வருபவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. முதலில் பாகுபலி 1,2 திரைப்படத்தை தொடர்ந்து இவர் “RRR” என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் இந்த படத்திற்கு அவரது அப்பா திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்திற்கும் அவர் தான் எழுதி இருந்தார்.
தற்போது இந்த திரைப்படத்திற்கு மாபெரும் எடுத்து உள்ளதால் படம் வேற லெவல் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது இத்திரைப்படம் தெலுங்கு தாண்டி நான்கு மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. “RRR” ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சுதந்திர போராட்ட வீரர்களான கோமராம் பீம், சித்தராம ராஜூ ஆகிய கதாபாத்திரங்களில் தான் இவர்கள் இருவரும் நடிக்கின்றனர். மற்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய் தேவகன், ஆலியா பட், சமுத்திரகனி போன்ற பலரும் நடிக்கின்றனர் இந்த திரைப்படத்தில் இருந்து இதுவரை GLIMPSE வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.
அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் RRR வெளியாக இருக்கிறது இதற்கு முன்பாக வியாபார வேலைகளை படக்குழு தொடங்கியது இதுவரை திரைப்படம் ஒட்டுமொத்தமாக 700 கோடி வியாபாரம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தி உரிமை மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இதை எந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது மட்டும் இன்னும் படக்குழு சொல்லாமல் வைத்திருக்கிறது. ராஜமௌலியின் படங்கள் ஒவ்வொன்றும் படத்தின் படஜெட்டையும் தாண்டி வேற லெவலில் வசூல் அள்ளி உள்ளது. பாகுபலி, பாகுபலி 2 ஆகியவற்றை தொடர்ந்து இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஒரு வசூலை அள்ள ரெடியாக இருப்பதாக இப்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.