“RRR” படம் சென்னை ஏரியாவில் மட்டும் 4 வது நாள் முடிவில் அள்ளிய வசூல் – நிலவரம் இதோ.?

RRR
RRR

பிரமாண்ட இயக்குனர்  எஸ். எஸ் ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியவர்களை வைத்து இந்த பிரமாண்ட பொருட்செலவில் இயக்கிய திரைப்படம் தான் RRR. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக எடுக்கப்பட்டது. இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக மார்ச் 24-ம் தேதி கோலாகலமாக வெளியானது. RRR திரைப்படத்தில்  ஒவ்வொரு சீனும் ரசிக்கும்படி இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றனர்.

அதே சமயம் வசூலிலும் தாறுமாறாக அடித்தது நொறுக்கிறது. முதல் நாளிலேயே ஆந்திராவில் மட்டும் 100 கோடியை வசூலித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. உலக அளவில் முதல் நாளில் மட்டும் சுமார் 200 கோடிக்கு மேல் அள்ளியது.

அடுத்தடுத்த நாட்களிலும் RRR படத்தைப் பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கையே நாடி வருகின்றனர்.அதனால் வசூலில் எந்த குறைகளும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக உலகமுழுவதும் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 500 கோடியை வசூலித்ததாக அறிவித்தது.

தமிழகத்தில் மட்டும் வார முடிவில் சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில்  RRR படம் சென்னையில் மட்டும் 4 வது நாளில் மட்டும் சுமார் 4.21 கோடி வசூல் செய்ததாக தகவல் தெரிவிகின்றன.  RRR படத்தின் வசூல் நன்றாகவே நாளுக்கு நாள் அள்ளி வருவதால் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.