மிகப்பெரிய ஹிட்டடித்த அஜித்தின் பாடலுக்கு நடனமாடும் RRR பட பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ.

ajith
ajith

தல அஜித் தமிழ் சினிமா உலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.மேலும் இதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி  வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் தல அஜித் நடிப்பில் கடந்த 2015 இல் வெளியான திரைப்படம் தான் வேதாளம் இந்து திரைப்படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று விட்டது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு ஆர் ஆர் ஆர் படத்தின் பிரபலங்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,ராஜமௌலி போன்ற பலரும் ஒரு திருமணம் ஒன்றில் நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித்தின் பாடல் என்றால் அனைவருக்கும்  பிடிக்கும் என கூறி வருகிறார்கள்.