“RRR” உங்க ஆட்டம் முடிய போகிறது.? வலிமை ஆட்டம் ஆரம்பிக்க போகிறது – போஸ்டரை ஒட்டி கெத்து காட்டும் AK ரசிகர்கள்.

valimai and rrr

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக படக்குழு பல வேலை பார்த்து வருகிறது.ஒரு பக்கம் டிரைலர் என்றால் மறுபக்கம் பிசினஸ் வேட்டையும் ஜோராக செய்து வருகிறது.

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறியிருந்தாலும் இன்னும் ரிலீஸ் தேதியை மட்டும் உறுதியாக கூறாமல் இருப்பதால் எந்த தேதி என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் கணிப்பு ட்ரெய்லரில் தேதியுடன் பென்ஷன் பண்ணுவார்கள் என கூறி வருகின்றனர்

. வலிமை படத்துடன் பல்வேறு திரைப்படங்கள் மோத இருந்த நிலையில் அனைத்தும் முன்னும் பின்னும் ரிலீசாகி உள்ளது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசம் வைத்திருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள  RRR திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படம் சிறப்பாக ஓடும் பட்சத்தில் வலிமை படத்திற்கு சற்று வசூல் வேட்டையை பின்தங்க வைத்து விடும். இதை அறிந்த AK ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் அவரவர் தனது கருத்துக்களை கூறி வந்த நிலையில் போஸ்டருக்கு பெயர்போன மதுரை ரசிகர்கள் வலிமை படத்திற்கு முன்னதாக வர இருக்கும்  RRR.

படத்தை விமர்சிக்கும் வகையில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர் அதாவது அஜித் ரசிகர்கள் கூற வருவது RRR  படத்தின் ஆட்டம் முடிய போகிறது எனக்கூறி போஸ்டரை அஜித் ரசிகர்கள் மதுரை சுற்றி ஒட்டியுள்ளனர். இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

valimai
valimai