காலங்கள் முன்னேற முன்னேற சினிமாவுலகமும் புதியதை நோக்கி ஓடுகிறது அதற்கு ஏற்றார்போல இயக்குனர்களும் தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர் அந்தவகையில் எஸ் எஸ் ராஜமௌலி.
அண்மைக்காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து அசத்துகிறார். அதுவும் உண்மை சம்பவம் மற்றும் நாவல்களை மையமாக வைத்து படங்களை இவர் இயக்குவதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் படங்கள் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் அதிக நாட்கள் ஓடுவதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கி கின்றன.
அந்த வகையில் ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகத்தை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு இப்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக கடந்த 24ம் தேதி உலக அளவில் வெளியானது RRR.
படம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதோடு வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது முதல் நாளில் மட்டுமே RRR 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூலை கண்டு வந்தது இப்பொழுது வரை RRR திரைப்படம் நாம் எதிர்பார்க்காத வசூலை அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பார்க்கையில் RRR படம் இதுவரை உலக அளவில் 710 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது இன்னும் குறைந்த நாட்களிலேயே நல்ல வசூலை அள்ளி 1000 கோடியை தொட்டு விடும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் RRR ஒரு புதிய சாதனையை படைக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.