இப்பவந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூலை முந்தி ஓடிக்கொண்டிருக்கும் RRR.? இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா..

RRR-
RRR-

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வருபவர் எஸ்எஸ் ராஜமௌலி.அந்த வகையில் பிரபாஸை வைத்து ஏற்கனவே பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தார் எஸ் எஸ் ராஜமௌலி அதனைத் தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு..

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணை வைத்து மிக பிரமாண்ட பட்ஜெட்டில் RRR என்ற திரைப்படத்தை எடுத்தார்.இந்த படம் கடந்த 24 ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்சன் சென்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக இருந்த காரணத்தினால்..

ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது. இதனால் இப்பொழுதும் இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன முதல்நாளிலேயே  200 கோடிக்கு மேல் உலக அளவில் அள்ளியது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை வந்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில்  தமிழில் வெளியான பல்வேறு நடிகர்கள் படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது RRR.தெலுங்கு படமான  RRR தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் 40 கோடி வரை வசூலித்து உள்ளதாகவும்..

இனி வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தி மிகப்பெரிய ஒரு வசூலை எட்டும் என கூறப்படுகிறது இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த தமிழ்நாட்டு வாசலையும் முறியடித்து தற்போது வெற்றிகரமாக ஓடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.