தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை கொடுத்து அடுத்த லெவலுக்கு எடுத்து செல்கிறார் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி பாகுபலி 2 நான் ஈ மகதீரா ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் வேற லெவல் ஹீட்.
அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இயக்குனர் ராஜமௌலி எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்ட படங்களாக இருந்து வந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியவர்களை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து பாலிவுட் பிரபலம், சமுதிரகணி அஜய் தேவ்கன் போன்றவர்களும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. RRR படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் ஆகியவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இது இப்படி இருக்க மறுபக்கம் படக்குழு போஸ்ட் பிரமோஷன் வேலைகளை யும் தாண்டி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வலம் வருகிறது.
அந்த வகையில் டிடி தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் RRR படக்குழு கலந்துகொண்டது இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர்கள் இணைந்தனர். அப்பொழுது பல்வேறுவிதமான கேள்விகளுக்கு பதிலளித்தனர் ஏன் ராஜமௌலி கூட அஜித் பற்றி பேசினார் அவரை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் விஜய் குறித்து பேசினார்.
அவர் சொன்னது : விஜய் உடன் நான் நிறைய முறை பேசி உள்ளேன் பெரிய நடிகர் என்ற தலைக்கனம் இல்லாமல் சாதாரண மனிதராக இருப்பார் மாஸ்டர் படத்திற்கு பிறகு கூட அவரிடம் பேசியிருந்தேன் நல்ல நண்பர் என்னை விட சினிமா துறையில் சீனியர் எனக்கு அவரது நடனம் ரொம்பவும் பிடிக்கும் என கூறியிருந்தார்.