எஸ் எஸ் ராஜமௌலி வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்கக்கூடிய இயக்குனர் அதனால் தான் இவரது திரைப்படங்கள் எப்பொழுது வெளியானாலும் சூப்பர் ஹிட் அடிக்கும் அதுவும் குறிப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில் இவர் எடுக்கும் படங்கள் மிகப் பெரிய அளவில் உருவாக்குவதால் படம் வேற லெவல் வருகின்றன.
உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதால் இவரது படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் அந்த வகையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாவது பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பிறகு ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் தான் RRR.
இந்தப் படமும் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது இந்த படம் 1920ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதையை படமாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஷூட் தொடங்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தடைகளை தொடர்ந்து சந்தித்ததால் ஒருவழியாக 2022-ல் வெளியானது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வென்று உள்ளது RRR. இந்தப்படத்தில் ஹீரோக்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் மிரட்டி இருந்தனர் குறிப்பாக சென்டிமெண்ட் மற்றும் ஆக்சன் சீன்கள் வேற லெவல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இணைந்து ஆலியா பட், சமுதிரகணி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து மிரட்டி இருந்தனர். முதல் நாளில் மட்டுமே RRR திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் RRR படம் வெளியாகி ஒன்பது நாட்கள் ஆன நிலையில் இதுவரை மட்டுமே பல கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்துள்ளது. RRR 9 நாட்களில் 80 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.