கமலஹாசன் அவர்களால் அப்செட்டாக இருந்த நிலையில் கம்பேக் கொடுக்கும் ரவுடி பேபி.!

bigg boss 123
bigg boss 123

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சாந்தி, ஜி.பி முத்து, அசல் கோளாறு, ஷெரின் ஆகியோர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் 17 போட்டியாளர்களுக்கு இடையே மிகவும் கடுமையான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது.

எனவே அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் சில நாட்களாக ஒரு போட்டியாளர் மட்டும் மிகவும் அப்செட்டில் இருந்து வருகிறார். அது வேறு யாருமில்லை ஆயிஷா தான் கடந்த இரண்டு வாரங்களாகவே ஆயிஷா மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.

ஏனென்றால் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருக்கிறது அதனையும் மீறி கமல் அவரை கண்டிப்பதாக சில விஷயங்கள் கூறி வருகிறார். எனவே அதனை ஆயிஷாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மேலும் கமலஹாசன் அவர்கள் சொல்வதை வைத்து தன்னுடைய பெயர் வெளியில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்திருப்பதாக நினைத்து சோகத்தில் இருந்து வருகிறார்.

ஆனால் ஜனனி உள்ளிட்ட பலரும் அவருக்கு தங்களுடைய அட்வைஸை கொடுத்து வந்த நிலையில் இன்று மீண்டும் பழைய எனர்ஜிவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதாவது நேற்று சரியான காரணத்தை சொல்லி அமுதவாணன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் நாமினேஷனில் தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்று விக்ரமன், அமுதவாணன், குயின்சி, ஆயிஷா நான்கு பேரும் சேர்ந்து மற்ற போட்டியாளர்களை பார்த்து விரலும் அளவுக்கு சண்டை போடும்படி பிராங்கிங் செய்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆயிஷா டாஸ்க்களிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். பிறகு ஆயிஷா எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு வந்த நிலையில் தற்போது அசீம் சொல்வதைக் கேட்டு நிதானமாக விளையாடி வருகிறார். ஒருவேளை தனக்கு அந்த விஷயம் பிடிக்கவில்லை என்றாலும் வேற எந்த கருத்தும் சொல்லாமல் அந்த இடத்தில் இருந்து சென்று விடுகிறார். இவ்வாறு சோர்வாக இருந்த ஆயிஷா தற்பொழுது மிகவும் தன்னுடைய ரகளை ஆரம்பித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.