சினிமாவில் பொதுவாக நடிகைகள் என்றால் மிகவும் அழகாக கலராக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் நினைப்போம். ஆனால் அழகு மற்றும் கலர் இரண்டைவிடவும் திறமை வலிமையானது என்று அனைவருக்கும் தெரிய படுத்தியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவரை தொடர்ந்து சின்னத்திரையில் கருப்பு பேரழகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரோஷினி. இவர் கருப்பாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் எடுத்துள்ளார்.
பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.அந்த வகையில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒரு பெண் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரோஷ்ணியும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புடவையில் மட்டுமல்லாமல் மாடர்ன் உடையிலும் அழகா தான் இருக்கீங்க கண்ணம்மா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.