விருது வாங்கிய பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்ரியன்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

roshni-haripiriyan-1
roshni-haripiriyan-1

தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் கருப்பாக இருந்தாலும் கூட தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் சமீபத்தில் தான் பெற்ற விருது குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் கண்ணமாவாக தனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் ஃபேவரிட் நடிகையாக மாறினார்.

பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகினார். ஆனால் தற்பொழுது பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி 3 மூலம் மீண்டும் விஜய் டிவியில் பண்ணியாற்றினார் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த அந்த நிலையில் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆனார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது She பத்திரிக்கை வழங்கும் she விருது ரோஷினிக்கு கிடைத்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரோஷினி, She குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் ரோஷினிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.