பொதுவாக நடிகைகள் வெள்ளித்திரையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முன்னணி நடிகைகளாக நடித்துவிட்டு அதன் பிறகு தனது கடைசி காலங்களில் சின்னத்திரையில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர் தான் சௌந்தர்யா கேரக்டரில் நடித்து வரும் ரூபா ஸ்ரீ.
இவர் மலையாளத்தில் வெளிவந்த கள்ளனும் போலிசும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட் உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக 2009ஆம் ஆண்டு வெளிவந்த யாவரும் நலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் ரூபாஸ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் இவருக்கு பெரிதளவில் பிரபலத்தை தந்துள்ளது.
தற்பொழுது பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியல்களும் ஒன்றிணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இவர் தற்போது குடும்ப குத்துவிளக்காக அனைவருக்கும் பிடித்த வகையில் நடித்து வந்தாலும் இவரின் இளம் வயதில் இவரும் ஒரு படுகவர்ச்சியான நடிகையாக தான் நடித்துள்ளார்.
அந்த வகையில் பொண்டாட்டியே தெய்வம் என்ற திரைப்படத்தில் அதிகளவு கவர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.அவ்வபொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தாலும் அவ்வப்போது இவரும் ஒரு கவர்ச்சி நடிகைதான் என்று கூறி வருகிறார்கள்.இதோ இந்த புகைப்படம்.