தமிழில் இந்த ஆண்டு வெளியான காதல் திரைப்படங்களின் பட்டியலை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். இதில் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அதில் சீதா ராமம், முதல் நீ முடிவும் நீ, ராதே ஷ்யாம், இத்தனை பல திரைப்படங்கள் உள்ளது. இதோ அந்த படங்களின் பட்டியல்.
முதல் நீ முடிவும் நீ :- இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்து இயக்கியுள்ள முதலும் நீ முடிவும் நீ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
என்ன சொல்ல போகிறாய் :- குக் வித் கோமாளி அஸ்வின், தேஜி, அவந்திகா, நடிப்பில் ஒரு முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் ஓட வில்லை என்றாலும் சர்ச்சையின் மூலமாக இந்த படம் பிரபலமானது.
ராதே ஷ்யாம் :- பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டை நடிப்பில் ஒரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹே சினாமிகா :- துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், நடிப்பில் உருவாகியுள்ள இந்த காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஒரு வெற்றி படமாக அமைந்து பிரபலமானது.
காத்து வாக்குல ரெண்டு காதல் :- இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்து உள்ளது.
திருச்சிற்றம்பலம்:- தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீதா ராமம், லவ் டுடே, ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர் மத்தியில் இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்களும் வரவேற்பை பெற்றனர்.