உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன், ஏஜெண்ட டினா மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருந்தனர்.
கதை களமும் சற்று வித்தியாசமாக இருந்ததால் தற்பொழுதும் திரையரங்கில் விக்ரம் படம் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது. இதுவரை மட்டுமே கமலின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 340 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன்.
விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜிக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக கொடுத்தார் மேலும் உதவி இயக்குனர் 13 பேருக்கு அப்பாச்சி ஆர்டிஆர் பைக் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்து அழகு பார்த்தார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் சேதுபதியிடம் பல்வேறு விதமான கேள்விகள் எடுக்கப்பட்டது அப்போது விக்ரம் படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் பணியாற்றியதற்காக இயக்குனர்களுக்கு கமல் பரிசுப் பொருளைக் கொடுத்தார்.
அப்படி உங்களுக்கு ஏதாவது கொடுத்தாரா என கேட்டனர் அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது பெரிய பரிசு தான். எவ்வளவு பெரிய விஷயம் இது. என் வாழ்நாளில் கற்பனை கூட செய்திராத விஷயம். இப்படியெல்லாம் நடக்கும் என யோசித்து கூட இல்லை என பதிலளித்தார்.