தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பேயாட்டம் ஆடி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழில் கமல் நடிப்பில் ஏதேனும் ஒரு வெற்றித் திரைப்படம் வராதா என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு மாபெரும் விருந்தாக மாறிவிட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் கமல் நடிப்பை போல பகத் பாசில் விஜய்சேதுபதி சூர்யா என அனைவருடைய நடிப்பும் பெருமைக்குரிய விஷயமாக அமைந்துவிட்டது.
மேலும் இந்த திரைப்படம் தற்போது தமிழகத்தில் மட்டுமே சுமார் 150 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது மிகப்பெரிய சாதனையை படைத்தது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த திரைப்படம் கே ஜி எஃப், பாகுபலி, கானா போன்ற திரைப்படங்களை ஓவர்டேக் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் அந்த பாகம் பற்றிய அப்டேட்டுகள் சமூக வலைதள பக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனைத் தொடர்ந்து சினிமா பத்திரிகை சேனல் ஒன்று விக்ரம் மூன்றாம் பாகம் கதையை கூறி உள்ளார்கள். அவர்கள் கூறியது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் சூர்யா கொடூர வில்லனாக நடிக்க சம்மதிக்கமாட்டார். ஏனெனில் அவர் அவ்வாறு நடிப்பதில் விருப்பம் காட்ட மாட்டார்.
எனவே படத்தின் இறுதியில் தான் ஒரு போலீஸ் அதிகாரி என கூறுவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அதே போல கமல் ரோலக்ஸ்க்கு எதிரானவர் என்பது போல காட்டப்பட இந்த திரைப்படத்தில் அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்கள்.