“ROLEX” கதாபாத்திரத்தில் நடிக்க முழு காரணம் இதுதான் – தம்பியின் கேள்விக்கு பதில் அளித்த சூர்யா.!

surya
surya

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். முதலில் பருத்திவீரன் ஏற்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடை குட்டி சிங்கம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்து ஓடியவர்.

இப்பொழுது கூட தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்றான விருமன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டது ஆக்சன், செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் சூப்பராக வொர்க் அவுட் ஆகி உள்ளது.

கார்த்தியுடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன், அதிதி ஷங்கர், மைனா நந்தினி, சிங்கம் புலி, பிரகாஷ்ராஜ், மனோஜ், சூரி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று ஓடுகிறது அதன் காரணமாகவே வசூலிலும் பட்டையை கிளப்பி உள்ளது இதனால் பட குழுவும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகர் கார்த்தி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அப்பொழுது அவர் விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி சுவாரசியமான தகவல் தெரிவித்துள்ளார் விக்ரம் படத்தில் சூர்யா வில்லத்தனமாக நடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

முதலில் ரோலக்ஸ் கேரக்டருக்கு  எப்படி ஒத்துக்கிட்ட என கேட்டேன் சூர்யா ரொம்ப நாளாக இப்படி ஒரு வித்தியாசமான வில்லன் கேரக்டர் பண்ணனும் என்று நினைத்திருந்ததாகவும் மேலும் கமல் சார் அவர் மேல இருந்த மரியாதைக்காகவும் நடித்ததாக சொன்னாராம். ஆனால் அது இவ்வளவு பெருசா க்ளிக் ஆகும் ரசிகர்கள் இப்படி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லையாம் இதனை சூர்யாவையே கார்த்தியிடம் சொல்லினாராம்.