TRP உச்சத்தில் இருந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வந்தது.! இதோ அர்ஜுன் போட்ட எமோஷனல் பதிவு..

arjun
arjun

சீரியல் என்றாலே சன் டிவி தான்  அந்த வகையில் டிஆர்பி யில் உச்சத்தில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் தொலைக்காட்சி. ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே டிஆர்பி யில் போட்டி நிலவி வருகிறது ஆனால் எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும் சீரியலை பொறுத்தவரை டிஆர்பி யில் உச்சத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு மிகப்பெரிய இல்லத்தரசிகள் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும். அப்படி பல வருடங்களாக மிகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலில் அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இந்த கதாபாத்திரத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் மெய்மறந்து பார்ப்பார்கள் அந்த அளவு இந்த கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதற்கு தகுந்தார் போல் கதைகளிலும் சில மாற்றங்கள் நடைபெற்று இருந்ததை நாம் பார்த்திருந்தோம்.

இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த சீரியலில் நடித்து வரும் சிபு சூரியன்  என்கின்ற அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு ரோஜா சீரியல் முடிவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு தெரிய வந்துள்ளது. ஏனென்றால் அந்த பதிவில் இன்று தான் அர்ஜுன் சாராக என்னுடைய கடைசி நாள் என அந்த பதிவில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் என அனைவருக்கும் நன்றி எனவும் கூறி ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவு செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவை பார்த்து ரோஜா சீரியல் விரைவில் முடியை இருக்கிறது என்பதை தற்போது உறுதி செய்துள்ளது.

arjun
arjun