80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த ரோஜாவின் மகள் தற்பொழுது திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் இது உண்மையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நடிகை ரோஜா ஹீரோயினாக நடித்த காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இவருடைய நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று பலரின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். இவ்வாறு கதாநாயகியாக கலக்கி வந்த இவர் இயக்குனர் செல்வராகவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ரோஜா மற்றும் இயக்குனர் செல்வராகவன் தம்பதியினர்களுக்கு அன்ஷூ மாலிகா என்ற ஒரு மகள் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் ஆகிய பயிற்சிகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்,தெலுங்கு போன்ற மொழி தயாரிப்பாளர்களிடம் அன்ஷூ கதாநாயகியாக நடிப்பதற்காக ரோஜா அதனைப் பற்றி பேசி வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்தவுடன் அவர் கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஜாவே தன்னுடைய மகளுக்கு நடிப்பது எப்படி என பயிற்சி கொடுத்து வருவதாகவும் இயக்குனர் செல்வராகவன் ஒரு படத்தை எப்படி எல்லாம் இயக்க வேண்டும் என நுட்பங்களை மகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நடிகை ரோஜாவின் மகள் விரைவில் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட சினிமாவில் அறிமுகமாகி கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அன்ஷூ புக்கு எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார்.