சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வெற்றி கண்டு வருபவர் காயத்ரி இவர் நாம் பெரிதும் காத்திருப்பது என்னமோ சீரியலில் தான். அந்த வகையில் மெட்டி ஒலி போன்ற பல்வேறு பிரபலமான சீரியல்களில் நடித்து வந்த காயத்ரி.
அதன்பிறகு வெள்ளிதிரையிலும் நடித்து அசத்தியுள்ளார். பாசமலர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்து அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தற்போது சினிமாவில் பெரிதும் வாய்ப்புகள் வழங்காததால் ரோஜா சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் காயத்ரி நடித்து வருகிறார் இந்த நிலையில் காயத்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாசமலர் படத்தில் அஜித் மற்றும் பட குழுவினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட 27 வருட பழமையான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது பழைய நினைவுகளை ஷேர் செய்துள்ளார் காயத்ரி.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் சித்தி, அம்மா கதாபாத்திரங்களிலும் மிக சிறப்பாக நடிக்க கூடிய திறமை இவருடன் இருப்பதாக பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போதும் கூறி அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதோ காயத்ரி அஜித்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இதோ.