ரோஜா மகளின் ஒரே ஒரு புகைப்படத்திற்காக குவியும் பட வாய்ப்புகள்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

roja daughter
roja daughter

Roja daughter : தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் அப்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்து வந்தவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவை 2002ஆம் ஆண்டு வரை தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரோஜா.

ரோஜாவிற்கு நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலில் அதிக ஆர்வம் உண்டு, அதனால் நடிகை ரோஜா தன்னை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் 1999ஆம் ஆண்டிலிருந்து தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் அதனால் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என மிகவும் பிஸியாக இருந்த ரோஜா ஒரு காலகட்டத்தில் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை ஆனால் தொலைக்காட்சிகளில் நடுவராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது இவர் ஆந்திராவின் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் மாநில மகளிர் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த கோரோனோ காலத்திலும் தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ரோஜா. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளின் 17வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தட்டிவிட்டார், அவ்வளவுதான் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் 17 வயதில் மடமடவென வளர்ந்துள்ள ரோஜாவின் மகளைப் பார்த்து நெட்டிசன்கள் ரோஜாவையும் அவரின் மகளையும் கம்பேர் செய்து வர்ணித்து வருகிறார்கள். மேலும் ரோஜாவின் மகளை சினிமாவில் நடிக்க வைக்கலாம் என புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் என கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மேலும் ரோஜா வெளியிடும் புகைப்படத்தை பார்த்து பல தயாரிப்பாளர்கள் படையெடுத்து விட்டார்கள் ரோஜாவின் வீட்டிற்கு ரோஜாவின் மகளை படங்களில் நடிக்க வைக்க.

இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

roja-daughter 1
roja-daughter 1