25 லட்சம் மதிப்புள்ள வைரநகையை கொடுத்த ரோஹித் – சந்தேகப்பட்டு வெண்பா எடுத்த முடிவு.! பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இன்றைய எபிசோட்.

bharathi-kannamma
bharathi-kannamma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் வெண்பா ரோகித்தை பார்த்து நீ பிராடு ஏமாற்றுக்காரன் என திட்டி வருகையில் ரோஹித்  என்னை பார்த்து இப்படி சொல்றியே நான் உனக்காக 25 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்..

வாங்கி வந்து இருக்கேன் என ரோகித் வெண்பா கழுத்தில் அந்த நெக்லஸை போட்டு விட வெண்பா இதனை நம்பாமல் நகை கடையில் இருந்து ஒரு சேட்டை கொண்டு வந்து இந்த நெக்லஸ் வைரமா போலியா என செக் பண்ண சொன்னார் அந்த சேட்டும் நகையை பார்த்து விட்டு இதை யார் உங்களிடம் கொடுத்தார்..

என கேட்டதும் வெண்பா ரோகித் சிக்கிட்டான் என நினைத்து ரோகித்தை கீழே வரச் சொன்னதும் சேட்டு இது எங்கும் கிடைக்காத கோகினூர் வைரம் என சொன்னதும் வெண்பா அதிர்ச்சியாகியுள்ளார். ஆனால் ரோகித்தோ முன்னெச்சரிக்கையாக வெண்பா இப்படி செய்வாள் என தெரிந்து கொண்டு தன் நண்பனை வைத்து..

சேட்டின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சேட்டை இப்படி பேச வைத்துள்ளார். இது எப்படி இருக்க மருத்துவமனையில் ஜானுவின் உடல் கவலைக்கிடமாக இருக்கின்ற நிலையில் ஜானுவின் கணவர் கண்ணம்மாவிடம் ஜானுவுக்கு என்ன பிரச்சனை என்னிடம் சொல் என கேட்க்கிறார்.

இதை அவகிட்ட சொல்ல வேணாம் என்று கூறுவதும் இப்படி மாறி மாறி இருவரும் ஒருவர் பற்றி ஒருவரை யோசிப்பதால் இவர்களின் பாசத்தை கண்டு கண்ணம்மா மிகவும் நெகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.