சமீபகாலமாக பெண்களை தவறாக சித்தரித்து காசு பார்த்து வருகிறது ஒரு கும்பல் அதனை தடுக்க துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி வருண் குமார் அவர்கள் தனிப்பட்ட புகார் எண் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார்.அந்த புகார் எண்ணை தொடர்ப்பு கொண்ட ஒருவர் என் மனைவின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் விடுவேன் என்று ஒருவன் மிரட்டுகிறான் அதுமட்டுமில்லாமல் நீங்கள் பணம் கொடுத்தால் நான் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை விட மாட்டேன் இல்லை என்றால் விட்டு விடுவேன் என கூறுகிறான் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரியான வருண் குமார் அவர்கள் இதற்காக சிறப்பான தனிப்படை ஒன்றை அமைத்து சைபர் கிரைம் உதவியுடன் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினார். இது குறித்து விசாரணையின் பொழுது பரமக்குடி உலகநாத புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (வயது 19). அந்த பையன் மீது சந்தேகம் எழுந்தது இதனை அடுத்து விசாரித்த பொழுது அந்த பையன் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது அதனை அடுத்து மேலும் பல விசாரிக்கும்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
ரோகித் முகநூலில் 4 போலியான கணக்குகளை உருவாக்கியிருக்கிறார் அதில் இரண்டு கணக்குகள் மூலம் முகநூலில் இருந்த பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமான புகைப்படங்களாக மாற்றி அந்த பெண்னின் நெருங்கிய நண்பர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்து பணம் பிடுங்கியுள்ளான். ரோஹித் இது போன்று பலரிடம் கைவசம் காட்டி உள்ளார் மேலும் அவரது செல்போனை பிடுங்கி பார்த்த பொழுது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.
இவனைப் போலவே உச்சிப்புளி புதுமடம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் என்ற நபரும் இன்ஸ்டாகிராமில் போலியான பல கணக்குகளை ஓபன் செய்து பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கி பல பெண்களை மிரட்டி உள்ளார் இதனை அடுத்து புகாரின் பெயரில் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர் அதுபோல ரோகித் அவரையும் தற்போது போலீஸ் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.