இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது இன்று நடக்கவுள்ள இந்த போட்டியில் யாருடைய அதிகம் முதலில் இருக்கும் என பலரும் ஆராய்ந்து தனது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் நிதானமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ரன் வேட்டை நடத்துவார்கள் என கூறப்படுகிறது அதுபோல நியூசிலாந்திலும் சிறந்த பவுலர்கள் இருப்பதால் அந்த அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் என கூறப்படுகிறது.
இந்திய அணி ஆதிக்கத்தை முதலில் செலுத்த தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அவசரப்படாமல் விளையாடவும் புதுவிதமான சாட்டுகளை பயன்படுத்தாமல் நிதானமாக நின்று வரும் பந்துகளை சரியாக மன நிலைமையில் எதிர்கொண்டு ஆடினால் ரன்களை குவிக்க முடியும் என பலரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேஸ்ட்மன்னுமான தீப் தாஸ் அவர்கள் ரோஹித் ஷர்மாவுக்கு சில அட்வைஸ்களை கொடுத்து உள்ளார். அவர் சொன்னது.
ரோகித் சர்மா ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தற்போது அவர் இங்கிலாந்து பீச்சில் நியூசிலாந்துடன் விளையாட உள்ளார். இந்த பீச் இங்கிலாந்தில் இருந்தாலும் நியூசிலாந்து பீச் போன்றே இருப்பதால் நியூசிலாந்து பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.
அதனால் ரோஹித் சர்மா கவர், புல் சாட் போன்றவற்றை அவசரப்படாமல் சரியான மனநிலையில் எதிர்கொண்டு ஆடினால் ஆட்டம் சிறப்பாக இருப்பதோடு நீண்ட நேரம் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் இதனால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் அதை தவற விடக்கூடாது என அவருக்கு டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.