இந்திய அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுக்க காரணம் அவர் எடுத்துக்கொண்ட சபதமே என கூறப்படுகிறது 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்து இருந்தாலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இவர் விளையாட முடியாமல் போனது.
இவருக்குப் பின் வந்த கோலி கூட 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடி அசத்தினார். தான் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக ஒரு பெற வேண்டும் என 2012ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒரு சபதத்தை மேற்கொண்டார்.
அதை நோக்கி பயணிக்க எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைத்து கிரிக்கெட்டை மிக நேர்த்தியாக எடுத்துச் சென்று பத்து ஆண்டுகளுக்கு தனது கடின உழைப்பை போட்ட தற்போது இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக ரோஹித் சர்மா மாறியுள்ளார்.
இப்போ ஒரு வீரராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியை வெற்றிபெற கேப்டன்னாக அனைத்தையும் தன்வசம் வைத்து இருக்கிறார். வீரராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் – லில் இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளார், ஆசிய கோப்பை, ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம், IPL லில் 4 சதம் என தோட்ட எல்லாத்திலும் வெற்றி கண்டுள்ளார்.
ரோஹித் 10 ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட சபதத்தை ஒருவழியாக நிறைவேற்றி உள்ளார். இப்போ இந்திய அணியில் தவீர்க்க முடியாத நாயகனாக மாறியுள்ளார். அவரது ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்.