இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் ரோகித் சர்மா. போட்டியின் போது ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் போகப்போக தனது அசுர தனத்தை காண்பித்து பந்தை நாலாபக்கமும் சிதறி விடுவது ரோஹித் சர்மாவின் வழக்கமாக இருந்திருக்கிறது அதிலும் 20 ஓவர் பார்மட் என்றால் சொல்லவே வேண்டாம்.
ஆரம்பத்திலேயே பட்டைய கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் ரோகித் சர்மா ஒரு வீரராக சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கேப்டன் பொறுப்பையும் திறம்பட கையாண்டு உள்ளார். மும்பை அணிக்காக 2013 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை கேப்டனாக அவர் செயல்பட்டு வருகிறார் அவர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்து தன் வசப்படுத்தி இருக்கிறார்.
மேலும் ஐபிஎல் லில் ஒரு கேப்டன் அதிகமுறை கோப்பையை வெற்றி கண்டவர் என்பவர்களின் முதன்மையானவராக ரோகித் சர்மா இருக்கிறார் ஐபிஎலையும் தாண்டி இந்திய அளவில் கேப்டனாக அவர் அவ்வபோது செயல்பட்டது உண்டு. ஆசிய கோப்பை, நிதாஹஸ் டிராபி என பல்வேறு தொடர்களை வென்று கொடுத்துள்ளார். இவரது கேப்டன்ஷிப்பை பார்த்து பிசிசிஐ இவருக்கு தற்போது 20 ஓவர் பார்மட்டில் முழுநேர கேப்டனாக செயல்பட அறிவுறுத்தியது.
மேலும் வெகு விரைவிலேயே இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் அவர் செயல்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ரோகித் சர்மா குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார் அதில் அவர் கூற வருவது : ரோகிதவுடன் நான் பேசி உள்ள வரையில் அவர் ஒரு ஸ்மார்ட்டான கிரிக்கெட் வீரர் மூளைக்காரர் அவர் எந்த சூழலிலும் பயப்பட மாட்டார்.
அழுத்தத்தை மிக சிறப்பாக அவர் எதிர்கொண்டதை நானே பார்த்திருக்கிறேன் ஒரு அணியை வழிநடத்தும் பொழுது கூல்லாக இருப்பது மிகவும் முக்கியம் ஒரு கேப்டன் வெவ்வேறு விஷயங்களை கையாளவேண்டியது அவசியம் ரோகித்சர்மா கூலாக இருப்பார் நான் மும்பை அணியில் ஆடியபோது கேப்டனசி திறனை நிறைய பார்த்திருக்கிறேன் என்று சச்சின் புகழ்ந்து பேசினார்.