எதிர் அணி வீரர்களே பாத்து இருந்துகோங்க.. ரோஹித் இப்ப வேற மாதிரி இருக்காரு.. எச்சரித்த இந்திய கோச்..?

rohit sharma

இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் மைதானத்தில் நியூஸ்லாந்து உடன் மோத உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்பதால் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டு அணியிலும் சமமாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இதில் யார் வெற்றி பெறுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது இந்த போட்டியில் பொருத்தவரை எந்த அணி தனது அசாதாரணமான திறமையை முதலில் வெளிப்படுத்துகிறது அந்த அணிதான் வெற்றிபெறும் என கிரிக்கெட் வல்லுனர்கள் ஒருபக்கம் கூறுகின்றனர். அப்படி பார்த்தால் இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தியா அணியில் களமிறங்கும் ஓபனர் முதலில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நியூசிலாந்தை சுக்கு நூறாக உடைக்க முடியும் அந்த வகையில் ரோகித் சர்மா சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிக்கொண்டு வருகிறார். ஆனால் அவரால் இதுவரையிலும் மிகப்பெரிய அளவில் ஒரு ஸ்கோரை எட்ட முடியாமல் விளையாடி வருகிறார்.

ஒருநாள் போட்டி மற்றும் 20 20 ஆகிய போட்டிகளில் குறைந்த பந்துகளில் செலவு செய்தாலும் அதன் பின் ஒவ்வொரு பந்தையும் அடித்து சுக்கு நூறாக பிரித்து எடுப்பார். டெஸ்ட் போட்டி அவ்வாறு கிடையாது ரோஹித்  கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல தற்போது தயாராகி வருகிறார். australia ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஓரளவுக்குத் நல்ல ஆட்டத்தை வெளிபடுத்தினார் ரோஹித்.

அது தற்போதைய இறுதிப்போட்டிக்கு போதாது இன்னும் அவர் பல திறமைகளை கற்றுக்கொண்டு ரோகித் விளையாட வேண்டும் என பலரும் கூறினர். இந்த நிலையில் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியது.

ரோகித் சர்மா தனது ஆட்டம் எண்ணங்கள் இலக்கு மற்றும் தனது சிறப்பான செயல்பாடு எங்கிருந்து தொடங்க வேண்டும் தெளிவோடு இப்பொழுது இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சாதிக்கும் ஆற்றலும் திறமையும் ரோஹித்திற்கு எப்போதும் இருக்கிறது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது விளையாட்டு வாணியின் ஐடியாவை மெருகேற்றி உள்ளார். 2020 முதல் ஒரு டெஸ்ட் ஓபனர் ஆக அவர்களும் இறங்கியதில் இருந்து அவர் ரெட் பால் கிரிக்கெட் அணுகும் விதத்தை நாங்கள் நன்றாக கணித்து வருகிறோம்.

rohit sharma
rohit sharma

அவர் எப்பொழுதும் மிக தீவிரமான விளையாட்டு திட்டத்தையும் வழியையும் கொண்டிருப்பவர் இதனால் லிமிடெட் அவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிக்க முடிகிறது ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருக்க மாட்டார் ஆனால் இன்று டெஸ்ட் போட்டிகளில் ரோகித் பார்க்கிறீர்கள் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கிறது அவர் உணர்வுபூர்வமாக அதை செய்ய தொடங்கியுள்ளார்.

rohit sharma

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவரது இன்னிங்ஸ் நிதானமாகவும் மிகவும் தொடங்கியுள்ளார் அவர்கள் அதில் தனது இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறார்கள் அதில் சிறிது நேரம் என்று விட்டால் அவரது திறமை என்ன என்பது பின்னர் நமக்கு தெரியும்.

நான் எதிரணிகளை எச்சரிக்கிறேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இப்போதுதான் தனது கணக்கை தொடங்கி உள்ளார் அவர் தொடர்ந்து இப்படியே விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வித்தியாசமான ரோஹித்தை நீங்கள் பார்ப்பீர்கள் அவருடைய மிகச்சிறந்த ஆட்டம் இனிமேல்தான் வர உள்ளது என தெரிவித்தார்.