400 இருக்கைகளை புகுந்து விளையாடிய ரசிகர்கள்.. எத்தனை லட்சம் நஷ்டம் தெரியுமா.? பெருந்தன்மையாக விட்ட ரோகிணி திரையரங்க நிர்வாகம்

leo
leo

Leo Trailer: விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் நேற்று வெளியானதனை தொடர்ந்து இதனால் ரோகிணி தியேட்டருக்கு 10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ரோகிணி நிர்வாகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எனவே இதற்காக விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வரும் நிலையில் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகளையும் படக் குழு வெளியிட்டது. இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் லியோ படக் குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என கூறியது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இந்த சூழலில் நேற்று விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் குவிந்தனர். ரோகிணி தியேட்டரால் ஏற்கனவே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததால் போலீஸார்கள் அறிவுரை கூறினர்.

எனவே எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என பல முயற்சிகளை செய்தும் ஆனால் கடைசியாக விஜய் ரசிகர்கள் ரோகிணி தியேட்டருக்கு பல லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அதாவது லியோ பட ட்ரெய்லர் திரையிடலின் பொழுது சென்னை ரோகிணி திரையரங்குகளில் 400 இருக்கைகள் சேதமாகி உள்ளது.

எனது இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக ரூபாய் 10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரோகிணி திரையரங்க நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறையிலும் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்றும் திரையரங்க நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு விஜய் ரசிகர்கள் லியோ ட்ரெய்லரை பார்த்துவிட்டு வெறித்தனமாக திரையரங்கை சூரையாடி உள்ளார்கள்.