சென்னையில் முக்கிய இடத்தில் வேட்டையை ஆரம்பித்த லியோ.! கொளுத்துங்கடா வெடிய.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

leo ticket sale in rohini : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா இணைந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளார்கள்.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த நிலையில் இன்று அதிகாலை ரோகிணி திரையரங்கில் இங்கு லியோ புக்கிங் கிடையாது என ஒரு போர்டு வைத்திருந்தார்கள் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அது மட்டும் இல்லாமல் தயாரிப்பு நிறுவனம் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே உள்ள பஞ்சாயத்து தான் இப்படி ஒரு போர்டை வைத்தார்கள்.

அதனால் ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படுமா மாட்டாதா என பலரும் குழப்பத்தில் இருந்தார்கள், இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது தயாரிப்பு நிறுவனம் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அதாவது தயாரிப்பு நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே ஒரு வார வசூலில் 65 சதவீதம் 35 சதவீதம் என்ற அடிப்படையில் தர ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து அதிரடியாக டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது ரோகிணி திரையரங்கம் 20 சதவீத டிக்கெட்கள் கவுண்டரிலும் மற்ற டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்து வேட்டையை ஆரம்பித்து விட்டார்கள். தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே ஒரு வார வசூலில் லாப பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு என சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் திருவிழா போல் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

Exit mobile version