சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சாப்பிடும் பொழுது அண்ணாமலை கம்மியாக சாப்பிடுவதால் அவருக்கு சாப்பாட்டை அதிகமாக வைக்கிறார் மீனா.
எனக்கு போதும் என கூற அதற்கு நீங்க இப்பல்லாம் வரவர கம்மியா சாப்பிடுறீங்க மாமா அதனால நல்லா சாப்பிடுங்க என சொல்லுகிறார் உடனே விஜயா அவர்தான் போதுன்னு சொல்றார் இல்ல விட்டுடு என கூறுகிறார். அவருக்கு ஏதாவது ஆச்சின்னா என்ன பண்றது கம்மியாவே சாப்பிடட்டும் என பேசுகிறார்.
அந்த சமயத்தில் அண்ணாமலை சிரித்துக் கொண்டே அப்பொழுது எங்க அம்மா கம்மியா சாப்பிடற இந்த நெறையா சாப்பிடு என ஊட்டிவிடுவாங்க அதுவே கல்யாணத்துக்கு அப்புறம் இவ்வளவு சாப்பிடுரிங்க என்று உங்க அம்மா கேட்கிறார் என முத்து கிட்ட அண்ணாமலை கூறுகிறார். அதனால் தான் நீங்கள் வேலைக்கு போகும் போது சின்ன கேரியராக கொடுத்தாங்களா என பேசுகிறார்.
அதற்கு அண்ணாமலை சின்ன வயசுல நிறைய சாப்பிடணும்னு அம்மா ஊட்டி ஊட்டி வளப்பாங்க அதுவே வயசான காலத்துல அதிகமா சாப்பிட்டா ஏதாவது ஆயிட்டும்ன்னு பொண்டாட்டி சாப்பாட்டை குறைப்பா எல்லாமே நம்ம நன்மைக்கு தான் . என கூறுகிறார். சாப்பிட்டு முடித்தவுடன் ரவி சுருதி இருவரும் வருகிறார்கள் அப்பொழுது ரவியிடம் விஜயா சண்டை போடுகிறார் எதற்காக அழைக்க போனாய் என கேட்கிறார்.
அதேபோல் சுருதி என் பேச்சை மதிக்காமல் போன இப்ப என்ன ஆச்சு ஏன் வந்த என கேட்க ரவி தான் என்னை கன்வின்ஸ் பண்ணுனா என கூறுகிறார். உடனே எங்க மானத்தை வாங்க தான் உங்க வீட்டுக்கு போனியா எனக்கு கேட்க இது என்னோட குடும்பம் நான் எப்படி என் குடும்பமானதை நானே வாங்குவேன் என விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார் சுருதி.
மேலும் இதனைக் கேட்டு அண்ணாமலையும் நெகிழ்ச்சி அடைகிறார் பிறகு அனைவரும் செல்ல ரவியிடம் விஜயா எதற்காக அவளை அழைத்து வந்தாய் இனிமே உன் பேச்ச கேட்கவே மாட்டா என உசுப்பேத்தி விடுகிறார். ஆனால் மீன அண்ணி தான் எனக்கு சொல்லி புரிய வச்சாங்க அதனாலதான் அழைச்சிட்டு வந்தேன் எனக்கூற மீனா விடம் சென்று விஜயா சண்டை போடுகிறார்.
அப்பொழுது அண்ணாமலை வந்து நீ செய்ய வேண்டியதை மீனா செஞ்சிருக்கா அவளை பாராட்டணும் இப்படி திட்டக்கூடாது என சண்டை போடுகிறார் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த உனக்கு என்ன அது நல்ல விஷயம் தானே அதை தானே மீனாவும் செஞ்சு இருக்கா என பேசுகிறார்கள்.
அடுத்த காட்சியில் மீனா பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி மேலே துணி காய போட்டு இருக்கிறாயா மழை வர்ற மாதிரி இருக்கு போய் பாரு என அனுப்பிவிட்டு பாலில் தூக்க மாத்திரையை கலந்து விடுகிறார் பிறகு மீனா அந்த பாலை முத்துவிடம் கொடுத்துவிட்டு தானம் குடித்து விடுகிறார் இதனால் ரோகிணி தன்னுடைய காரியத்தை சாதிக்க இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.