உரிய அனுமதியின்றி வெளிநாட்டு கிளிகளை அடைத்து வைத்ததால் ரோபோ சங்கருக்கு விதிக்கப்பட்ட அபதாரம்.! இத்தனை லட்சமா..

robo-sgangar
robo-sgangar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரோபோ ஷங்கர். ஏராளமான பிரபலங்கள் தொலைக்காட்சிகளின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து பல திரைப்படங்களை நடித்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் நடுவராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் குணசத்திர நடிகராகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து ரோபோ ஷங்கர் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அனுமதி இன்றி அலெக்சாண்டரின் கிளிகளை ரோபோ சங்கர் வளர்த்து வந்த நிலையில் தற்போது அவருக்கு அபகாரம் போடப்பட்டுள்ளது. அதாவது ரோபோ சங்கரின் மனைவி சமீபத்தில் அவர்களுடைய யூடியூப் சேனலில் தனது வீட்டில் வளர்க்கும் கிளிகள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தார் அந்த கிளிகள் அலெக்சாண்டரியன் கிளிகள் ஆகும்.

எனவே இவர்கள் வனத்துறை அனுமதி இன்றி இந்த கிளிகளை வளர்த்து வந்த நிலையில் ரோபோ சங்கரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனத்துறை அதிகாரிகள் கிளிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இது தெரிந்துக் கொண்ட ரோபோ சங்கரின் மனைவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அந்த கிளிகளை என்னுடைய தோழி பரிசாக தந்ததாகவும் இதனை அனுமதி பெற்று தான் வளர்க்க வேண்டும் என்று தனக்கு தெரியாது எனவும் அதனை எங்களுடைய குழந்தைகள் போல இரண்டு வருடங்களாக வளர்த்து வருவதாகவும் கூறினார்.

எனவே வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை எடுத்துச் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்து உள்ளனர் மேலும் இது குறித்து விசாரணை நடத்திய நடத்திய நிலையில் ரோபோ சங்கர் தன்னுடைய நண்பர் தான் எனக்கு தனக்கு பரிசாக அளித்ததாகவும் அந்த கிளிகளுக்கு பிகில் மற்றும் ஏஞ்சல் என பெயர் வைத்து அழைப்பதாகவும் கூறினார்கள்.

எனவே இது போன்ற வெளிநாட்டு கிளிகளை அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது என வனத்துறை அதிகாரிகள் கூறிய நிலையில் தற்பொழுது உரிய அனுமதியின்றி அலெக்சாண்டரின் கிளிகளை வீட்டில் வளர்த்ததற்காக நடிகர் ரோபோ சங்கருக்கு ரூபாய் 2.5 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.