விக்ரமின் தில் திரைபடத்தில் ரோபோ ஷங்கரின் மனைவியா..? புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

thil

robo shankar wife acting vikram movie: தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு பின் நடிப்பின் நாயகனாக ரசிகர்கள் தேர்தெடுத்தவர் தான் நடிகர் விக்ரம். இவர் ரசிகர்களால் சியான் விக்ரம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது.

பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்னவென்றால் அது சேது திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் பல படங்கள் வெற்றி கண்டது என்று கூட நாம் கூறலாம்.

சேது திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்த வெற்றியை கொடுத்த திரைப்படம் என்னவென்றால் தில் திரைப்படம் தான். இத்திரைப்படத்தை இயக்குனர் தரணி அவர்கள் இயக்கி மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

தற்பொழுது இத் திரைப்படம் வெளியாகி கடந்த இருபது ஆண்டுகள் ஆகிறது. இத் திரைப்படத்தில் நடிகையாக லைலா, நாசர், விவேக்,  வையாபுரி என பல பிரபல காமெடி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் அவரது மனைவியும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்  காமெடியனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டு வருகிறார்.

இவரைப் போலவே இவரது மகளும் இந்திஜா அவர்கள் இளைய தளபதி விஜய் அவர்களுடன் பிகில் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.  அதுமட்டுமல்லாமல் டிக் டாக் செயலி மூலம் தினம்தோறும் வீடியோக்களை பதிவு செய்து தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தினர்.

roboshankar-wife1
roboshankar-wife1

இவருடைய திறமையை பார்த்து வியந்து போன இயக்குனர் அட்லி அவர்கள் இவரை திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த திரைப்படம்தான் பிகில். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி கொடுத்த காரணத்தினால் நடிகர் ரோபோ ஷங்கர் கண்ணீர் மல்க தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

இத் திரைப்படத்திற்கு பிறகு தனது மகளுக்கு பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும் இதற்கு அட்லிக்கு நன்றி தெரிவித்தார் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்.  அதேபோல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவரது மனைவியும் நடிகர் விக்ரம் அவர்களுடன் தில் திரைப்படத்தில் சிறிய காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.

அதாவது அத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை லைலா உடன் இணைந்து சிறிய காட்சியில் ரோபோ சங்கரின் மனைவி நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

roboshankar-wife2