அண்மை காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்து தனது திறமையை காட்டி பட வாய்ப்புகளை அள்ளி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் பிரபலமடைந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.
ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதில் தனது முழு திறமையையும் வெளிகாட்டி தற்பொழுது வெற்றி மேல் வெற்றியை கண்டு வருகிறார். இதுவரை நடிகர் ரோபோ சங்கர் அஜித், விஜய், தனுஷ், விஷால், ஜீவா சரவணன் ஸ்டோர் அருள் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது ரோபோ சங்கர் கையில் தி லெஜன்ட், yutha satham ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. சினிமாவில் நடிப்பதையும் தாண்டி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் ரோபோ சங்கர் தாவி உள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வர இருக்கிறது இந்த கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் இறுதி கட்ட சீரியலில் அவர் ஒரு சாமியார் வேஷத்தில் நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் கூட தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..