ரோபோ ஷங்கர் திரையுலகில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடியன்னாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் முதலில் ஸ்டார் விஜய் -ல் கலக்கப்போவது யாரு ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் அறிமுகமானார். அதில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கியதோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.
அப்படித்தான் ரோபோ ஷங்கர் 2011 ஆம் ஆண்டு ரௌத்திரம் என்னும் படத்தில் கோகுல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் அன்றிலிருந்து இப்பொழுது வரை நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அஜித், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகரின் படங்களில் வருகிறார்.
இப்படிப்பட்ட ரோபோ ஷங்கர் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று தான் இருப்பார் ஆனால் திடீரென என்ன ஆச்சு என தெரியவில்லை உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாதபோது மாறினார். இருந்தாலும் வாய்ப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை தொடர்ந்து நடித்து வருகிறார்.
இப்பொழுது கூட ரோபோ சங்கர் கைவசம் பார்ட்னர் மற்றும் ஒரு சில திரைப்படங்கள் இருக்கின்றன இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் நடிகர் தனுஷ் பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் தனுஷ்கும் குடிப்பழக்கம் இருந்தாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாரி படத்தில் தனுஷ் உடன் நடித்திருந்த ரோபோ சங்கர் அந்த சமயத்தில் தனுஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் ஆனால் சுதாரித்துக் கொண்ட அவர் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாக கூறினார் எனக்கும் இருந்த அதே கெட்ட பழக்கம் தனுஷ்கும் இருந்தது என ரோபோ சங்கர் சுட்டிக்காட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷயம் அறிந்த தனுஷ் ரசிகர்கள் ரோபோ சங்கரை விமர்சித்து வருகின்றனர்.