தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் ரோபோ சங்கர் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார்.
இவர் ஸ்டார் விஜயில் பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 2011 ஆம் ஆண்டு மிமிக்ரி கலைஞராக உருவெடுத்தார் அதன் பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டு நடிக்க வந்தார். அதனைத் தொடர்ந்து யாருடா மகேஷ், கப்பல், வாயை மூடி பேசவும் பாலாஜி மோகன், டூரிங் டாக்கீஸ் என பல திரைப்படங்களில் நடித்தார்.
அதேபோல் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா பிகில் திரைப்படத்தில் கால் பந்து விளையாட்டு வீராங்கனையாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் அவர் ஜீ தமிழில் சர்வேயர் நிகழ்ச்சியில் நடித்திருந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் அதிகமாக இருந்து பார்ப்பதற்கு நன்றாக இருந்தார் ஆனால் சில மாதங்களாக உடல் எடை முழுவதும் குறைத்து ஆளே மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் சில ரசிகர்கள் அவரின் உடலுக்கு என்னதான் பிரச்சனை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு என்ன பிரச்சனை என்று இதுவரை வெளியே தெரியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்டுள்ள டெஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது இந்த புகைப்படத்தை ரோபோ சங்கரின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.