சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த பல பிரபலங்கள் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோர்களை கூறலாம் அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் ரோபோ சங்கர் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தவர்.
காமெடி மிமிக்கிரி என தன்னுடைய திறமையால் மிகவும் பிரபலமடைந்த ரோபோ சங்கர் பிறகு சினிமாவில் காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தார். இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் அதிர்ச்சியில் அழுத்தி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் அவர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ரோபோ சங்கர் தானா என அதிர்ச்சி அடைந்தார்கள் அது மட்டுமில்லாமல் உடல்நல குறைவால் தான் ஒல்லியாக மாறி இருப்பார் என ரசிகர்கள் கவலைப்பட்டார்கள் இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் ரோபோ சங்கர் உடல் நிலை குறித்து பேசப்பட்டது.
அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயம் தான் அதிர்ச்சி தகவலாக வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது ரோபோ சங்கர் மிமிக்ரி நடிகராக இருக்கும் பொழுதே எனக்கு நன்றாக தெரியும் அவர் ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டார். ஆனால் அவர் சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார் மது அருந்தாமல் தூக்கமே அவருக்கு வராத நிலை ஏற்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் பொது இடத்தில் மது அருந்தியதை பல பேர் பார்த்தார்கள் அவரின் இந்த நிலைமைக்கு மது பழக்கம் தான் காரணம் அதனால் தான் அவருக்கு மஞ்சகாமாலை வந்து உடல் மிகவும் மெலிந்து நடப்பதற்கே சிரமமாகிவிட்டார் தற்பொழுது அவரால் நிற்க்க கூட முடியாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.