வெள்ளி திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர் இவர் பல இளம் தலைமுறை நடிகர் நடிகைகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார். சின்ன திரையில் தனது திறமையை வளர்த்து படிப்படியாக இந்த இடத்திற்கு வந்துள்ளார் அதனால் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். முதலில் “தர்ம சக்கரம்” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் அது பெரிய அளவில் பேசப்படவில்லை.. தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் “ஏய்” திரைப்படத்தில் ஆர்மி மேனாக நடித்து பிரபலமடைந்தார் அதன்பிறகு அவ்வபொழுது படம் பண்ணி வந்தாலும் பெரிய அளவிற்கு இவருக்கு மார்க்கெட் ரீச் ஆகவில்லை எனவே சின்னத்திரை பக்கம் தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடியில் அசத்தினார்.
இதில் பேரும் புகழும் சம்பாதித்ததால் வெள்ளி திரையில் பட வாய்ப்புகள் குவிந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோபோ சங்கர் 2015 லிருந்து தற்போது வரை.. வருஷத்திற்கு குறைந்தது 5, 6 படங்கள் பண்ணி வருகிறார் இப்பொழுது கூட இவரது கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறதாம்.. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நல்ல காச பார்த்து வரும் ரோபோ ஷங்கர்..
இது தவிர youtube சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதிலேயும் காசு பார்த்து வருகிறார். ஹோம் டூர் என்ற பெயரில் தனது வீட்டில் இருப்பதை காட்டிக் கொண்டிருந்தார் அப்பொழுது கூண்டில் இரண்டு கிளிகளை அடைத்து வைத்து வளர்த்து வந்தார் இதை பார்த்த வனத்துறையினர் கேஸ் போட்டதோடு மட்டுமல்லாமல் கூண்டில் இருக்கும் கிளியை சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த கிளியை தூண்டில் அடைத்ததற்காக ரோபோ சங்கர் மீது 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் மனைவி தெரிவித்தது.. இது மிகப்பெரிய தொகை கிப்டாக வந்த கிளி என்பதால் தான் நாங்கள் அனுமதி வாங்கவில்லை இதை மறைக்க வேண்டும் என நினைக்கவில்லை என அவர் கூறி இருந்தார்.